Tuesday, September 29, 2015

தவறான தகவல்களை நம்பி குறைந்த விலையில் தேங்காய்களை விற்க வேண்டாம் விவசாயிகளுக்கு மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் அறிவுரை



பொள்ளாச்சி,

தவறான தகவல்களை நம்பி குறைந்த விலையில் தேங்காய்களை விற்க வேண்டாம் என விவ சாயிகளுக்கு மத்திய தென்னை வளர்ச்சிவாரி யம் அறிவுறுத்தி உள் ளது.

மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

விலை வீழ்ச்சி

தேங்காய் விலையை செயற்கையாக வீழ்ச்சியடைய வைக்க சில நிறுவனங்கள், வியாபாரிகள் கூட்டு சேர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இதனால் தான் தற்போது கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெய் விலை செப்டம்பர் 6-ந்தேதி முதல் குறைய தொடங்கி உள்ளது. 

தென்னை அதிகம் பயிரிடப்பட்டு உள்ள கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைந்த அளவில் பெய்து உள்ளது. இதனால் வரும் நாட்களில் தேங்காயின் விளைச்சலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. பருவமழை குறைந்து உள்ளதால் தற்போது இளநீரின் விலை உயர தொடங்கி உள்ளது. தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலம் பதனீர் உற்பத்தி உயர்ந்து உள்ளது.வருகின்ற காலங்களில் சந்தைக்கு வரும் கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெய் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. 

வளர்ச்சி

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் தேங்காய் பொருட் கள் 2015-16-ல் நிலையான வளர்ச்சி கண்டுள்ளது. கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெய் மட்டுமல்லாது தேங்காய் அதிக அளவு மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றப்படுகிறது. தேங்காய் எண்ணெய் இறக்குமதி 2014-15-ம் ஆண்டை ஒப்பிடும் போது 2015-16-ல் 25 சதவீதம் குறைந்து உள்ளது. 

விழா காலங்கள் தொடங்க உள்ளதால் மேலை நாடுகளில் தேங்காய் எண்ணெயின் தேவை அதிகரித்து உள்ளது.

விழிப்புடன் இருக்க வேண்டும்

கடந்த 2 மாதங்களில் தேங்காய் பொருட்கள் விலை நிலவிவரங்களை கவனிக்கும் போது தேங்காய் விலை குறைவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. ஆனால் சந்தையில் குறைவான விலையில் தேங்காய் மற்றும் கொப்பரைகளை அதிக அளவில் கொள்முதல் செய்வதற்காக தான் சில நிறுவனங்களும், வியாபாரிகளும் தற்காலிக விலை வீழ்ச்சியை உருவாக்குகிறார்கள்.

அடுத்து வருகின்ற விழா காலங்களில் தேவை அதிகமாக உள்ளதால் தென்னை விவசாயிகள், தென்னை உற்பத்தியாளர்கள் சங்கம், தென்னை உற்பத்தியாளர்கள், நிறுவனங்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்

தென்னை விவசாயிகள் தவறான தகவல்களை நம்பி குறைவான விலையில் தங்களது தேங்காய்களை விற்க வேண்டாம். தற்போது தென்னை விவசாயிகள் ஆரம்ப கட்ட பதனிடுவதிலும், மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். கூட்டமைப்புகள் நவீன கொப்பரை உலர்த்திகள் அமைக்க கவனம் செலுத்த வேண்டும். அதில் கிடைக்கும் கொப்பரைகளை பயன்படுத்தி தென்னை உற்பத்தியாளர்கள், நிறுவனங்கள் கலப்படமில்லாத, தரமான தங்களது பெயரில் தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்ய வேண்டும்.

தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விலை தேங்காயின் விலையை சார்ந்து இருப்பதில்லை. விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் இளநீர் சந்தையில் கூடுதல் பலன்களை பெற முடியும். சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயிகள் தங்களது பொருட் களுக்கு கூடுதல் விலை பெற சந்தையில் நிலவும் சூழ்ச்சிகளை முறியடித்து செயல்பட முன் வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது 


No comments:

Post a Comment