Monday, October 26, 2015

சென்னையில் 1 லட்சம் வீடுகளில் மாடித் தோட்டம் திட்டத்தை விரிவாக்க முடிவு



சென்னையில் 1 லட்சம் வீடு களுக்கு மாடித் தோட்டத்தை விரிவுபடுத்தும் திட்டத்திற்காக வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத்துறைக்கு நவம்பரில் புதிய அலுவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழகத்தில் இயற்கை விவசா யம் மூலம் விளைவிக்கப்படும் ஆர் கானிக் காய்கறிகளுக்கு வரவேற்பு அதிகரித்தது. இதை தொடர்ந்து, வேளாண்துறையின் பிரிவான தோட்டக்கலைத் துறை சார்பில் சென்னையில் மாடித் தோட்டம் திட் டம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாடித்தோட்டம் குறித்த பயிற்சி யுடன் தோட்டம் அமைப்பதற்கான பிளாஸ்டிக் பைகள், விதைகள், தண்ணீர் தெளிக்கும் ஜாடி உள்ளிட்டவற்றை ரூ.1400 என்ற விலையில் வழங்கியது.
தோட்டக்கலைத் துறையில் அலுவலர்கள் பற்றாக்குறையால், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியாமல், திட்டம் முடங்கியது.
இந்நிலையில்தான், மாடித்தோட் டம் திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பான அறிவிப்பை சமீபத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
முதல் கட்டமாக சென்னையில் திட்டத்தை வேளாண்துறை விரிவு படுத்துகிறது. அடுத்தடுத்து கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இத்திட்டத்தை கொண்டு செல்லவும் முடிவெடுக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக வேளாண்துறை உயர் அதிகாரி ஒருவர்தி இந்துவிடம் கூறியதாவது:
சென்னையில் தற்போது 15 ஆயி ரம் வீடுகளில் மட்டுமே மாடித்தோட் டம் உள்ளது. முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து முதல்கட்டமாக சென்னையில் 1 லட்சம் வீடுகளை இலக்காக கொண்டு புதிய திட்டம் வகுத்துள்ளோம்.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 500 பூங்காக்களில் முக்கிய பகுதிகளில் உள்ள 100 பூங்காக்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மூலம் மாடித் தோட்டத்திற்கானகிட்மக்களுக்கு ரூ.500 மதிப்பில் வழங்கப்படும்.
கீரை, காய்கறி விதைகள், தென்னை நார் உள்ளிட்ட பொருட் கள் ஒப்பந்தங்கள் மூலம் கொள் முதல் செய்யப்பட்டு வருகிறது.
நவம்பர் முதல் வாரத்தில் வேளாண்துறை, தோட்டக்கலைத் துறைக்கான ஆட்கள் தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Source: The Hindu

No comments:

Post a Comment