Tuesday, October 27, 2015

வேளாண் காடுகளுடன் கால்நடைகளை ஒருங்கிணைத்தல் குறித்த பயிற்சி 3-ந் தேதி நடக்கிறது



நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி காலை 9 மணிக்கு “வேளாண் காடுகளுடன் கால்நடைகளை ஒருங்கிணைத்தல்” என்ற தலைப்பில் ஒருநாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் வேளாண் காடுகளின் முக்கியத்துவம், வேளாண் காடுகளின் வகைகள், வேளாண் காடுகளில் வளர்க்கக்கூடிய வணிகரீதியான மரவகைகள், தீவன மரங்கள், பழ மரங்கள் மற்றும் தீவனப்பயிர்கள் சாகுபடி, இவற்றுடன் கால்நடைகளை ஒருங்கிணைத்தல் குறித்த விரிவான பயிற்சி அளிக்கப்படும். மேலும் மரவகைகளில் நாற்று உற்பத்தி குறித்த செயல்விளக்கப் பயிற்சியும் அளிக்கப்படும். 

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் நாமக்கல் - மோகனூர் சாலையில் 7-வது கிலோமீட்டரில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வருகிற 2-ந் தேதிக்குள் பெயரை கண்டிப்பாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று திட்ட ஒருங்கிணைப்பாளர் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
 



http://www.dailythanthi.com/News/Districts/Namakal/2015/10/28004406/Agriculture-and-forestry-Livestock-Synchronizing-Training.vpf

No comments:

Post a Comment