Thursday, October 29, 2015

வடகிழக்குப் பருவ மழை தொடக்கம் - மீனவர்களுக்கு காரைக்கால் மீனவளத் துறை அறிவுறுத்தல்



இலங்கை அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால், மீனவர்கள் கடலுக்குள் குறுகிய தூரம் செல்லும்படியும், படகுகளை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கும்படியும் மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
காரைக்கால் மீன்வளத்துறை துணை இயக்குநர் (பொ) ந.இளையபெருமாள் வியாழக்கிழமை கூறியது :  வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இலங்கை அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால், அடுத்த 2 நாள்கள் மழை இருக்குமென வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
காரைக்கால் பகுதி மீனவர்கள் இக்காலத்தில் கடலில் ஆழ்கடல் பகுதிக்கு செல்லாமல், குறுகிய தூரத்திற்கு மட்டுமே சென்று மீன்பிடிக்க முன்வரவேண்டும். மாவட்டத்தின் கடலோரங்களில் நிறுத்திவைத்திருக்கும் படகுகளை, பாதுகாப்பான பகுதிக்கு கொண்டுசென்று நிறுத்தவேண்டும். ஒட்டுமொத்த மீனவர்களும் பருவமழை காலத்தில் உரிய விழிப்புணர்வுடன் செயல்படவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

http://www.dinamani.com/latest_news/2015/10/30/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article3105142.ece

No comments:

Post a Comment