Monday, October 26, 2015

வாழையில் நூற்புழு தாக்கம்; கட்டுப்படுத்த மாணவிகள் பயிற்சி


http://c13.zedo.com/OzoDB/0/0/0/blank.gif
வத்தலக்குண்டு : குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் கிராமத் தங்கல் திட்டத்தில் வாழையில் நூற்புழு நீக்குதல் குறித்து விராலிப்பட்டி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
விராலிபட்டி விவசாயி ராஜாவின் தோட்டத்தில் பூவன், ரஸ்தாளி ரகங்களில் நூற்புழு தாக்குதலை தவிர்க்க கன்று நடவு செய்யும் போதே தடுப்பு முறையை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தனர். மாணவிகள் அஞ்சலி, ஜெரிகாட் மெர்சி, நிவேதா, சத்யபிரபா, சத்யா, அம்ஸா, ஜெனோபர் நினூ, லினுமேத்யூ, மோகனசங்கவி, யுவப்பிரியா ஆகியோர் குழுக்களாக வாழை விவசாயிகளுக்கு பயற்சி அளித்தனர்.
மாணவிகள் கூறுகையில்,""வாழையில் நூற்புழு தாக்கம் வேர், குருத்துகளில் வராமல் இருக்க கன்றுகளின் அடிப்பகுதியில் செதுக்கி, அதனை மண் கூழில் முக்கி எடுக்க வேண்டும். குருணை மருந்தை அதன் மீது பரவலாக தூவி, 24 மணி நேரம் கழித்து நடவு செய்வதால் நூற்புழு தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்'' என்றனர்.

No comments:

Post a Comment