Monday, November 30, 2015

95 சதவீத உணவுகளுக்கு மண்ணே அடிப்படை: தேசியக் கருத்தரங்கில் ஸ்வீடன் விஞ்ஞானி

 மதுரையில் கடந்த வெள்ளி, சனிக்கிழமை களில் (20, 21ம் தேதி) நடந்த வேளாண் கருத்தரங்கின் தலைப்பே வித்தியாசமாக இருந்தது. ‘பசுமை பூமிக்கான உணவும், வேளாண்மையும்’ என்ற தலைப்பிலான இந்தக் கருத்தரங்கின் உள்ளடக்கமும்கூட இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்திருந்தது.
“மனித நாகரிகம் வளர்வதற்கு வேளாண்மையே அடிப்படை. ஆனால், என்றைக்குச் சந்தையை மையப்படுத்திய வணிகமாக விவசாயம் மாறியதோ, அப்போதே உணவு நஞ்சாக ஆரம்பித்துவிட்டது. மனித ஆரோக்கியம் மட்டுமின்றி, சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வேளாண்மை பிரச்சினைக்குரியதாகிவிட்டது” என்று ஆழமான கருத்தைப் பதிவு செய்தார் இன்ப சேவா சங்கத் தலைவர் முனைவர் பாதமுத்து.
கருத்தரங்கின் நோக்கம் பற்றி பேசிய பெராஸ் இந்திய அமைப்பின் தலைவர் பெருமாள், “பால்டிக் கடலை சூழ்ந்துள்ள ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி, போலந்து, பின்லாந்து, ரஷ்யா, நார்வே போன்ற நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகளால் பால்டிக் கடல் சீரழிந்தது. மீன்கள் செத்து மிதக்க ஆரம்பித்தன. பால்டிக் கடலை பழையபடி மீட்டெடுப்பதற்காக இந்த நாடுகளில் அரசு மற்றும் அரசுசாரா அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சியாளர்களுடன் பெராஸ் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டது. இதில் கிடைத்த வெற்றி, ஸ்வீடனில் கடந்த 30 ஆண்டுகளாக விவசாயப் பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முயற்சிகளின் அனுபவங்களை உலகின் மற்றப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில், இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாகப் பெராஸ் அமைப்பு செயல்பட்டுவருகிறது” என்றார்.

மண் வளமே மூலதனம்
“உலகில் உற்பத்தி செய்யப்படும் 95 சதவிகித உணவுக்கு மண்தான் அடிப்படை. ஒரு நாட்டின் மூலதனம் என்பது, அந்நாட்டு விவசாயிகளால் பராமரிக்கப்படும் மண்ணில்தான் இருக்கிறது.
உலக அளவில் ரசாயன உரங்களின் பயன்பாடு பல ஆயிரம் மடங்கு அதிகரித்துவிட்டது. மண்வளத்தைப் புறக்கணித்துவிட்டு, விளைச்சலில் மட்டுமே கவனம் செலுத்தியதால்தான் சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, நம் உடல்நலனுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த மண்ணில் இருந்து எந்த அளவுக்கு சத்தை எடுக்கிறோமோ, அந்த அளவுக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பூமியையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.
அரிசியை மட்டும் எடுத்துவிட்டு வைக்கோல், உமி போன்றவற்றை எரிப்பது சுற்றுச்சூழலுக்குக் கேடு தரும். அதை மட்க வைத்து, அதே நிலத்துக்கு உரமாகத் தர வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தனி மனிதர்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது அவசியம். இவை எல்லாம் ஏற்கெனவே இந்தியாவில் நடைமுறையில் இருந்தவைதான். அவற்றை அறிவியல்பூர்வமாக மேம்படுத்தி, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதும், அறிவைப் பரிமாறிக்கொள்வதும்தான் எங்கள் நோக்கம்” என்றார் பெராஸ் சர்வதேச அமைப்பின் தலைவர் ஜோஸ்டின்.
தொழில்நுட்பம் மட்டும் உதவாது
நிகழ்ச்சியில் உயிர்ச்சூழல் மறுஉருவாக்க வேளாண்மை குறித்து, இந்திய உயராற்றல் மேலாண்மை அமைப்பு ஜெயகரன் பேசுகையில், “அடுத்த 20 ஆண்டுகளில் 70 சதவீத மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வார்கள். எல்லாவற்றையும் தொழில்நுட்பங்கள் மூலம் சரி செய்துவிடலாம் என்று அலட்சியமாக இருக்காமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் காந்தி கிராமப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்.மார்க்கண்டன், சேஷாத்ரி, ஜெரோம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment