Tuesday, November 24, 2015

பாசனக் கருவிகளுக்கு அரசின் மானியம்



உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு அரசு நீர்ப்பாசன மேலாண்மைக்காக நல்ல திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. “தமிழ்நாடு நீர்வள, நிலவளத் திட்டம்” என்ற அருமையான திட்டத்தை வேளாண் பொறியியல் துறை செயல்படுத்துகிறது. ஒரு விவசாயிக்கு அதிக பட்சமாக 4 ஹெக்டேர் (10 ஏக்கர்) வரை விவசாயிகளுக்கு மானியம் வழங்குகிறது. சொட்டுநீர்/தெளிப்பு நீர் பாசன முறைகளை ஏற்படுத்த, டிராக்டர் போன்ற கருவிகள் வாங்க, சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார்கள் வாங்க கடனும், மானியமும் வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், நபார்டு போன்ற விவசாய வங்கிகள் என பல துறைகளும் விவசாயக் கடன், கால்நடை வளர்க்க, ஒருங்கிணைந்த பண்ணைகள் தொடங்க கடனுதவி, மானியம் வழங்குகின்றன. விவசாயிகள் தங்களுக்கு மத்திய, மாநில அரசுகள், வங்கிகள், பல்கலைக்கழகங்கள், வேளாண் பொறியியல் துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை போன்ற நிறுவனங்கள் கொடுக்கும் பயிற்சிகள், மானியம், சலுகைகள், கடனுதவிகள், ஆலோசனைகளை அறிந்து முன்னேறலாம். வனத்துறை, வன விரிவாக்கத்துறை மூலம் வழங்கப்படும் மரக்கன்றுகள் பெற்று வளர்த்து வளம் பெறலாம்.
எம்.ஞானசேகர்,விவசாய ஆலோசகர்,
93807 55629.


Source : Dhinamalar

No comments:

Post a Comment