Wednesday, November 25, 2015

கீழக்கரையில் விளையுது அமெரிக்கன் தட்டைப்பயறு


கீழக்கரை:கீழக்கரை அருகே ரெகுநாதபுரம் நயினாமரைக்கானைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது தோட்டத்தில் குளிர் பிரதேசங்களில் வளரும் அமெரிக்கன் தட்டைப்பயறு விளைகிறது.
அவர் அமெரிக்காவில் உள்ள தனது நண்பரிடம் இருந்து தட்டைப் பயறு விதையை வாங்கியுள்ளார். சோதனை முறையில் 10க்கும் மேல் செடிகளை
பயிரிட்டு உள்ளார். இது கொடி வகையை சேர்ந்தது. குளிர் சீதோஷ்ண நிலையில் வளரக் கூடியது. உள்நாட்டு ரகம் பயறு 25 செ.மீ., மட்டுமே வளரும். அமெரிக்கா தட்டைப்பயறு 60 செ.மீ., வரை வளர்ந்துள்ளது. இதில் 25 முதல் 30 வரை பயறுகள் உள்ளன. பயறுகள் திரட்சியாகவும், நிறமாகவும் இருக்கும்.விவசாயி ஆனந்தன் கூறுகையில், “அமெரிக்கன் தட்டை பயறுகளில் இனிப்பு, துவர்ப்பு இருப்பதால் சமைக்காமலே உண்ணலாம். இதில் அதிக புரதச் சத்து உள்ளது. 2 மாதங்களிலே விளைச்சலுக்கு வந்துவிட்டது. நல்ல விளைச்சல் உள்ளதால் விரைவில் பெரியளவில் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளேன்,” என்றார்.


No comments:

Post a Comment