Friday, November 27, 2015

ராமநாதபுரத்தில் விளையுது சாலட் வெள்ளரி



ராமநாதபுரம்: ராமநாதபுரம் சுந்தரமுடையான் கடற்கரை பகுதியில் சாலட் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது.இந்த வெள்ளரி குளிர் பிரதேசங்களில் விளையக் கூடியது. இதனை முதல் முயற்சியாக வெப்பம் மிகுந்த ராமநாதபுரத்தில் பயிரிட்டுள்ளனர். இவை கடற்கரை பகுதியான சுந்தரமுடையான் ஊரக வளர்ச்சி முகமையின் தோட்டக்கலை பண்ணையில் ஆயிரம் சதுர மீட்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குளிர் சீதோஷ்ண நிலையை உருவாக்க பாலிஹவுஸ் அமைக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் விடப்படுகிறது. தற்போது செடிகளில் சாலட் வெள்ளரிகள் காய்த்துள்ளன. ஒரு கொடியில் 6 காய்கள் வரை காய்க்கிறது. ஐந்து நாட்கள் வரை வதங்காமல் உள்ளது.தோட்டக்கலை உதவி இயக்குனர் நாகராஜன் கூறியதாவது: சாலட் வெள்ளரி சாதாரணமாக பயிரிட்டால் விளையாது. பாலிஹவுசில் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். இந்த வெள்ளரி 4 மாதங்களில் விளைச்சலுக்கு வரும். ஆயிரம் சதுர மீட்டரில் 15 டன் கிடைக்கும். ஒரு கிலோ ரூ.20 வரை விற்கலாம். இதன்மூலம் ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைக்கும். பாலி ஹவுஸ் அமைக்க ரூ.9.5 லட்சம் செலவானது. இந்த தொகையை 2 ஆண்டுகளில் பெற்றுவிடலாம், என்றார்.


No comments:

Post a Comment