Sunday, November 29, 2015

திருந்திய நெல் சாகுபடி முறை: அதிக மகசூலால் விவசாயிகள் ஆர்வம்


 ஆத்தூர்: ஆத்தூர் பகுதி விவசாயிகள், அதிக மகசூல் பெற, திருந்திய நெல் சாகுபடி முறையில், நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில், வட கிழக்கு பருவ மழை கணிசமான அளவில் பெய்ததால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. எனவே, நெல் சாகுபடி பணியில், விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேளாண்துறை மூலம், வீரிய ஒட்டு ரக நெல் விதை, .டி.டி., 45 போன்ற நெல் விதைகள், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குகின்றனர்.


இதுகுறித்து, அரசநத்தம் விவசாயி வளர்வேல் கூறியதாவது: ஒரு ஏக்கருக்கு, 25 கிலோ விதை நெல் நாற்று விடப்பட்டு, வழக்கமான முறையில், நடவு பணிகள் மேற்கொண்டால், ஏக்கருக்கு, 30 மூட்டை நெல் விளைச்சல் இருக்கும். எலி மற்றும் களைச் செடிகளால், மகசூல் பாதிப்பு ஏற்படும். திருந்திய நெல் சாகுபடி முறையில், ஏக்கருக்கு, 12 கிலோ விதை நெல் நாற்று விட்டு, 20 முதல், 30 நாள் கொண்ட நாற்றுகளை பிடுங்கி, உழுது தயார் நிலையில் உள்ள நிலத்தில், நடவு செய்யப்படுகிறது. இதில், 90 நாளில், ஏக்கருக்கு, 35 முதல், 40 மூட்டை மகசூல் கிடைக்கிறது. வரிசையாக நடவு செய்வதால், எலி, களைச் செடிகள் பிரச்னை குறைவு. குறைந்த செலவில் அதிக மகசூல் பெற, திருந்திய நெல் சாகுபடி முறை வழிவகுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment