Monday, December 28, 2015

10 ஆயிரம் பனை விதைகள் 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டன


அவிநாசி அருகே தண்டுக்காரம்பாளையத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் 10 ஆயிரம் பனை விதைகள், 2 ஆயிரம் பனை மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தண்டுக்காரம்பாளையம் அரசுப் பள்ளி மைதானத்தில் இதன் தொடக்க விழா நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்று குளக்கரையில் 10 ஆயிரம் பனை விதைகளையும், 2 ஆயிரம் மரக்கன்றுகளையும் ஒரே நாளில் நட்டுனர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மரம் மற்றும் இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்து இயற்கை ஆர்வலர் பாமயன் பேசினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் கண்ணன், இந்திய ராணுவப் பாதுகாப்பு படையில் பணியாற்றும் குருசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, வாகன ஆய்வாளர் ராஜு, பனை ஆர்வலர் தம்பி (எ) கருப்பசாமி, தண்டுக்காரன்பாளையம் காலனித் தலைவர் அவனாசி, மருத்துவக் கல்லூரி மாணவர் சஞ்சய், பள்ளி மாணவி மோகனப் பிரியா, சுதேசி இயக்கப் பொறுப்பாளர் குமரி நம்பி, நல்ல உணவு அமைப்பு சிவக்குமார், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment