Monday, December 28, 2015

இருமல், சளியை போக்கும் மருந்துகள்

The germs that cause respiratory diseases is important in the flood in the rainy season and the possible diseases of vessels. Throat

மழைக்காலத்தில் வெள்ளத்தினால் கிருமிகள் ஏற்படுத்தும் நோய்களில் முக்கியமானது சுவாச நாளங்களை பாதிக்க கூடிய நோய்கள். தொண்டை நோய்கள், சுவாச கோளாறுகள், இருமல், நெஞ்சக சளி, ரத்தம் கலந்து சளி வருவது போன்றவற்றுக்கான மருந்துகளை நாம் பார்ப்போம்.முள்ளங்கியை பயன்படுத்தி இருமல் மருந்து தயாரிக்கலாம். முள்ளங்கியை சுத்தப்படுத்தி தோல் நீக்கிவிட்டு அறைத்து 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். 

இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி எடுத்து, இருமல் இருக்கும்போது காலை, மாலை 50 மிலி எடுத்துக் கொள்ளவும். மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, தொண்டை கட்டுதல் ஆகியவை சரியாகும்.முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் வராமல் காக்கும். இது காந்தக சத்தை அதிகம் பெற்றுள்ளது. விட்டமின் சி, மினரல் இருக்கிறது. நோய் எதிர்ப்புசக்தி உள்ளது. சளியை கரைக்கும் தன்மை உடையது. 

உடலுக்கு உஷ்ணத்தை தரும்.வெற்றிலையை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். 2 வெற்றிலை, 2 லவங்கம், கால் ஸ்பூன் சீரகம், ஒரு ஏலக்காய், 5 மிளகு எடுத்துக்கொள்ளவும். வெற்றிலையை காம்புகள் நீக்கிவிட்டு துண்டுகளாக்கி எடுத்துக்கொள்ளவும். அதனுடன் தட்டி வைத்துள்ள லவங்கம், ஏலக்காய், மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்க்கவும். இதனுடன் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். இதை  இருமல், மூச்சிரைப்பு இருக்கும்போது குடித்தால் இப்பிரச்னைகள் சரியாகும். நுரையீரல் தொற்றுக்கு மருந்தாகிறது.

அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை மழை, குளிர் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சளி, இருமல், நெஞ்சக கோளாறுகள், ஆஸ்துமா ஏற்படும். வீட்டில் பயன்படுத்தும் வெற்றிலை, லவங்கம், சீரகம் உன்னதமான மருந்தாகி ஆஸ்துமாவை சரி செய்கிறது. இருமலை இல்லாமல் செய்கிறது. சளியை கரைக்கிறது. தொண்டை கட்டை சரிசெய்கிறது.இஞ்சியை பயன்படுத்தி இருமல், சளி, ஜீரண கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம். 

ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு, அரை ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் இருமல் குணமாகும். சளி கரைந்து வெளியேறும். தொண்டை கட்டு விலகும். செரிமான கோளாறுகள் சரியாகும். குழந்தைகளுக்கு இதில் பாதி அளவு கொடுக்கவும்.இஞ்சி காய்ந்த நிலையில் சுக்கு என்று அழைக்கப்படும். இஞ்சி, சுக்குவை புறதோல் நீக்கிய பின்புதான் பயன்படுத்த வேண்டும்.  கடுகை பயன்படுத்தி இருமல், மூச்சிரைப்புக்கான மருந்து தயாரிக்கலாம். கடுகை வறுத்து பொடி பண்ணி வைத்துக்கொள்ளவும். 

அரை ஸ்பூன் கடுகு பொடியில், ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். வடிகட்டி அரை ஸ்பூன் தேன் சேர்த்து குடித்தால் இருமல் சரியாகும். கடுகை குறைவாகத்தான் பயன்படுத்த வேண்டும்.கடுகு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்க கூடியது. பலத்தை தருவதுடன், ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சளியை கரைக்க கூடியது. இருமலை போக்கும் தன்மை கொண்டது.  

Source : Dinakaran

No comments:

Post a Comment