Tuesday, December 29, 2015

விதை சுத்திகரிப்பு நிலைய புதிய கட்டடம் திறப்பு


கள்ளக்குறிச்சியில் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் விதை சேமிப்பு கிடங்கை முதல்வர் ஜெ., வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி வேளாண் விதை சுத்திகரிப்பு நிலைய அலுவலக வளாகத்தில் 37.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் விதை சேமிப்பு கிடங்கு கட்டடம் புதியதாக கட்டப்பட்டது. இதனை முதல்வர் ஜெ., வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து அழகுவேலுபாபு எம்.எல்.ஏ., தலைமையில், குத்துவிளக்கேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஒன்றிய சேர்மன் ராஜசேகர் முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் ரத்தினசபாபதி வரவேற்றார்.
விழாவில் சி.எம்.எஸ்., தலைவர் பச்சையாப்பிள்ளை, துணை இயக்குனர்கள் தர்மலிங்கம், செல்வராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அய்யப்பா, ஒன்றிய அவைத் தலைவர் வைத்திலிங்கம், ஒன்றிய துணை சேர்மன் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் ராயப்பன், விதை சுத்திகரிப்பு நிலைய வேளாண்மை அலுவலர்கள் புஷ்பராணி, வனிதா, வேளாண்மை அலுவலர்கள் பொன்னுராசன், தேவி, நபிஷாபானு, கூட்டுறவு சங்க துணை தலைவர்கள் புண்ணியமூர்த்தி, செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment