Wednesday, January 27, 2016

பசுந்தாள் உரம் பயிரிட விவசாயிகளுக்கு ₹2 ஆயிரம் மானியம் வேளாண்மை அதிகாரி தகவல்

பசுந்தாள் உரம் பயிரிட விவசாயிகளுக்கு ₹2 ஆயிரம் மான்யம் வழங்கப்படுவதாக அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏ.எம்.சாந்தி தெரிவித்தார். அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏ.எம்.சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிரிட்டு மடக்கி உழுவதால் மண்வளம் பெருகி தழைச்சத்து கிடைக்கும். இதனால் மகசூல் அதிகரிக்கும். மேலும், விவசாயிகளுக்கு சாகுபடி செலவு 50 சதவீதம் குறைய வாய்ப்புண்டு. வேளாண்மை துறையின், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரப்பயிரிட்டு, மடக்கி உழவு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு எக்டருககு ₹2 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். இத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அனக்காவூர் வட்டார விவசாயிகள், பின்னேர்ப்பு மானிய விண்ணப்பத்துடன் பசுந்தாள் உரபயிர் சாகுபடி செய்துள்ள போட்டோவை இணைத்து விண்ணப்பித்து, பயன் அடையலாம். மேலும் விபரங்கள் அறிய விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment