Friday, January 29, 2016

வேளாண் கருவிகள் வாடகை மையம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


T
தேவகோட்டை,
தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் தேர்போகியில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கருவிகள் வாடகை மையத்தை மாவட்ட கலெக்டர் மலர்விழி திறந்து வைத்தார்.
வாடகை மையம்சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி வட்டம், தேர்போகி ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் கருவிகள் வாடகை மைய தொடக்க விழா நடந்தது. வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் கேசவன் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி பேசியதாவது:–
மாவட்டத்தில் முக்கியப் பயிரான ‘‘நெல் பயிர்’’ மற்றும் பயறு வகைகள், தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை ஒரே இடத்தில் சேகரித்து அனைத்து விவசாயிகளுக்கும் நியாயமான வாடகையில் கிடைக்க ‘‘வேளாண் கருவிகள் வாடகை மையம்’’ உருவாக்கப்பட்டுள்ளது.
மானியம்இந்த மையத்தின் சார்பாக விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகளின் குழுமம் அமைக்கப்பட்டு, அந்த மையத்திற்கு அரசு மானியமாக ரூ.10 லட்சம் வழங்க உள்ளது. இந்த மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை விவசாயிகள் நியாயமான வாடகைக்கு பெற்று தங்களுடைய அனைத்து வேளாண் பணிகளையும் தடையின்றி மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் செல்விபாண்டி, தேர்போகி ஊராட்சி தலைவர் தனபாக்கியம், விருதுநகர் கண்காணிப்புப் பொறியாளர் (வேளாண்மை) தெய்வேந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் குருமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி செயற்பொறியாளர் மனோகர்ஹென்றி சத்யசீலன் நன்றி கூறினார்.

Source :Dailythanthi

No comments:

Post a Comment