Friday, January 29, 2016

தேவையற்ற முடிகளை அகற்றும் மஞ்சள்

, May be added to the diet, be a disinfectant, removing unwanted hair, with nature, and includes a lot of good medicinal properties of turmeric

உணவில் சேர்க்க கூடியதும், கிருமி நாசினியாக விளங்குவதும், தேவையற்ற முடிகளை அகற்றும் தன்மை கொண்டதும், ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியதுமான மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் பார்ப்போம்.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மஞ்சள் அற்புதமான வலி நிவாரணியாக பயன்படுகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. வீக்கத்தை கரைக்க கூடியது. வலியை குறைக்கவல்லது. ஈரலுக்கு இது ஆரோக்கியத்தை தருகிறது. 

ஈரல் நோய்களை போக்குகிறது. ஈரலை நோய் தாக்காமல் பாதுகாக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் மருந்தாக மஞ்சள் விளங்குகிறது. தோல் நோய்களை குணப்படுத்துகிறது. பச்சையான மஞ்சள் கிழங்கை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான தேனீர் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: பச்சை மஞ்சள் கிழங்கு, நெல்லி வற்றல் பொடி. தோல் நீக்கப்பட்ட மஞ்சள் கிழங்கு பசை அரை ஸ்பூன் எடுக்கவும். 

இதனுடன் ஒரு ஸ்பூன் நெல்லி வற்றல் பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி 50 முதல் 100 மில்லி வரை குடித்துவர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். உடலுக்கு புத்துணர்வு ஏற்படும். கொழுப்பு சத்து குறையும். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாது. பச்சை மஞ்சள் கிழங்கை பயன்படுத்தி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றும் மருந்து தயாரிக்கலாம். 

சிறிது அரிசி மாவுடன், மஞ்சள் கிழங்கு பசையில் இருந்து எடுக்கப்பட்ட சாறு சேர்த்து கலக்கவும். தேவையற்ற முடிகள் இருக்கும் இடத்தில் இதை பூசவும். இரவு முழுவதும் விட்டு காலை எழுந்தவுடன் கழுவிவர தேவையற்ற முடிகள் போகும். மஞ்சள் கிழங்கை பயன்படுத்தி கால் ஆணிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்: மஞ்சள் கிழங்கு, வசம்பு பொடி, புங்க எண்ணெய், கற்பூரம், மருந்தாணி பொடி. சிறிது புங்க எண்ணெயுடன், அரைத்து வைத்த மஞ்சள் விழுதை சேர்க்கவும். இதனுடன் சிறிது கற்பூரம், மருதாணி இலைப்பொடி, வசம்பு பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை ஆற வைத்து வடிக்கட்டி வைத்துக்கொண்டு பூசினால் கால் ஆணி சரியாகும். கால் ஆணியால் ஏற்படும் வலி மறையும். 

வடு இல்லாமல் போகும்.மஞ்சள் கிழங்கை பயன்படுத்தி அடிபட்ட வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். மஞ்சள் கிழங்கு விழுதுடன் சிறிது உப்பு சேர்க்கவும். இதனுடன் நீர்விட்டு கலந்த சுண்ணாம்பு சேர்க்கவும். லேசாக சூடு செய்யவும். இதை எடுத்து பற்றாக போடும்போது அடிப்பட்ட வீக்கம், சுளுக்கு சரியாகும். மஞ்சளில் பல்வேறு நன்மைகள் உள்ளன. மஞ்சளில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. உணவில் சேர்க்கப்படும் மஞ்சள் கிருமி நாசினியாக விளங்குகிறது. 

Source : Dinakaran

No comments:

Post a Comment