Thursday, February 25, 2016

பிஞ்சில் புழு தாக்குதலை கட்டுப்படுத்த அதிகாரி யோசனை

முருங்கைகாய் பிஞ்சில் புழு மற்றும் மொக்கு புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த உதவி இயக்குனர் மணி யோசனை வழங்கியுள்ளார். க.பரமத்தி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் 4,800 ஏக்கர் பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக க.பரமத்தியில், 1,033 ஏக்கர் பரப்பளவில் முருங்கை விவசாயம் நடக்கிறது. தற்போது, மரத்தில் பூக்கள் தோன்றி பிஞ்சு விட ஆரம்பித்துள்ளன. இரவில் நிகழும் குளிர் தொடர்ந்து பகலில் காணப்படும் வெப்பநிலை காரணமாக இலைப்பிணிக்கும் புழு மற்றும் மொக்கு புழுவின் தாக்கம் காணப்படுகிறது. இதை தடுக்க குளோர்பைரிபாஸ் ஒரு மில்லி அல்லது தையோடிகார்ப் நனையும் தூள் ஒரு கிராம் இதில் ஏதேனும் ஒரு மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் காலை வேளையில் தெளிக்க வேண்டும். மருந்து மரங்களில் நன்கு ஒட்டும் அளவில் இருக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு மிகாமல் மருந்து கலவையை தயார் செய்து தெளிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு க.பரமத்தி வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம் எனத்தெரிவித்துள்ளார்.

source : dinakaran

No comments:

Post a Comment