Friday, March 18, 2016

நெற்பயிரில் பழநோயை கட்டுப்படுத்தும் வழிமுறை


நெற்பயிரில் பரவி வரும் பழநோயை கட்டுப்படுத்திடும் வழிமுறையை வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அனக்காவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அனக்காவூர் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தற்போது கதிர்பிடிக்கும் பருவத்தில் உள்ளன. இந்நிலையில், கதிரில் நெல் பழநோய் காணப்படுகிறது. இந்த நோயானது நெற்கதிரில் சில நெல் மணிகளை மட்டும் மஞ்சளாகவும், பின்னர் ஆரஞ்சு நிறத்துக்கும், அதன் பின்னர் கருப்பாகவும் மாற்றிவிடுகின்றன.
இதனை தடுக்கும் விதமாக நெல்லில் பூ பூப்பதற்கு முன்பாகவும், பூ பூத்தவுடன் ஒரு முறையும் புரஃப்பிபோகோனசோல் ஒரு ஏக்கருக்கு 200 மில்லி அல்லது காப்பர் ஹைடிராக்சைடு ஒரு ஏக்கருக்கு 500 கிராம் வீதம் தெளித்து நெற்பயிரினை பாதுகாத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

source : Dinamani

No comments:

Post a Comment