Tuesday, March 22, 2016

தேவாரம் விவசாயி தோட்டத்தில் "மெகா' சைஸ் மரவள்ளி கிழங்கு


தேவாரம் பகுதியில் மரவள்ளி கிழங்கு அறுவடை தீவிரமாக நடக்கிறது. வழக்கத்தை விட நான்கு மடங்கு பெரிய கிழங்கு, விவசாயி மாணிக்கம் தோட்டத்தில் கிடைத்தது.
தேவாரம் பகுதியில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மரவள்ளி கிழங்கு சாகுபடி நடக்கிறது. நெல், வாழை பயிரிட்ட பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு மற்றும் கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறையால் மரவள்ளி சாகுபடி நடக்கிறது.
2011-12ல் சேலம் "ஸ்டார்ச்' உற்பத்தியாளர்கள் கூடுதல் விலை கொடுத்து தேவாரத்தில் விளைந்த மரவள்ளி கிழங்கை கொள்முதல் செய்தனர். அந்த சீசனில் கூடுதல் விளைச்சல் இருந்ததால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. இதனால் மரவள்ளி சாகுபடி பரப்பு அதிகரித்தது. வெளிநாடுகளிலிருந்து குறைந்த விலையில் "ஸ்டார்ச்' இறக்குமதியானதால் மரவள்ளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை. ஒரு டன் ரூ. 10 ஆயிரமாக இருந்த மரவள்ளி விலை சரிந்து ரூ.3,500 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர்.
மரவள்ளியை வாட்டு கப்பையாக மதிப்பு கூட்டி கேரளாவிற்கு அனுப்பினர். இதனால் கணிசமான லாபம் கிடைக்கிறது. தேவாரம் நாடார் வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி மாணிக்கம் தோட்டத்தில், அறுவடையின் போது வழக்கத்தை விட நான்கு மடங்கு பெரிய கிழங்கு தோண்டப்பட்டது. மாணிக்கம் கூறுகையில், ""இரண்டு ஏக்கரில் மரவள்ளி பயிரிட்டுள்ளேன். மற்ற பகுதியில் ஏக்கருக்கு 6 டன் கிழங்கு தோண்டப்படுகிறது. எனது தோட்டத்தில் 10 டன்னுக்கு மேல் அறுவடை செய்யப்பட்டது. வழக்கமாக கிழங்கு 1 அடி முதல் அதிகபட்சமாக 2 அடி வரை இருக்கும். எனது தோட்டத்தில் சில கிழங்குகள் 3 அடி நீளத்திற்கு மேல் உள்ளது. ஒரு கிழங்கு 4 அடி 2 அங்குலம் வளர்ந்துள்ளது,''


Source : Dinamalar

No comments:

Post a Comment