Friday, May 27, 2016

கொடைக்கானலில் கோடை விழா மலர்க் கண்காட்சி நாளை தொடக்கம்


    கொடைக்கானலில் கோடை விழா மலர்க் கண்காட்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. 
     இதையொட்டி, பிரையண்ட் பூங்காவில் சால்வியா, டேலியா, டைந்தேஷ், ஆந்தோரியம், மேரிகோல்ட், சில்வேனியா, ரோஜா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வகைகளில் லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும், ஆயிரக்கணக்கான மலர்களால் மயில், தாஜ்மகால் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் காய்கறிகளால் கோபுரங்கள் உருவாக்கப்பட்டு கண்காட்சியாக வைக்கப்பட உள்ளது.
     தொடர்ந்து ஜூன் 6-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ள கோடை விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், நாய் கண்காட்சியும் நடைபெறுகிறது. விழாவையொட்டி சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை தோட்டக் கலைத் துறை நிர்வாகம் செய்துள்ளது. 
     இதேபோல, படகு குழாம் சார்பில் 28, 29 ஆகிய தேதிகளில் படகுப் போட்டி, வாத்து பிடிக்கும் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரையிலான 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர் என கொடைக்கானல் படகு குழாம் மற்றும் ரோயிங் கிளப் கௌரவச் செயலர் பவானி சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    Source : Dinamani

    No comments:

    Post a Comment