Tuesday, June 14, 2016

உடல் எடையை குறைக்கும் கல்யாண முருங்கை



பெண்களுக்கு உடல் எடை கூடுதல், குறைதல் பிரச்னை ஏற்படும். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதது, சர்க்கரை நோய், உடல் உழைப்பு இல்லாதது, வீட்டு வேலைக்கு இயந்திரங்களை பயன்படுத்துவது, மன அழுத்தம், சரியான நேரத்துக்கு சாப்பிடாதது போன்றவை உடல் எடை கூடுவதற்கு காரணமாக அமைகிறது. உடல் எடை குறைப்புக்கான கொள்ளு தேனீர் தயாரிக்கலாம்.

கொள்ளை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். 2 துண்டுகள் கொடம்புளியை ஊற வைக்கவும். இந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் கொள்ளுபொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி குடித்துவந்தால் உடல் எடை குறையும். இதை குடிக்கும்போது அசிடிட்டி பிரச்னை வரலாம். இதனை தவிர்க்க சாப்பாட்டுக்கு பின்னர் மோர் குடிக்கலாம்.

கொடம்புளி பசியை அடக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது. கொள்ளு உடலுக்கு உஷ்ணத்தை கொடுத்து கழிவுகளை வெளியேற்றும். உடல் எடையை குறைக்கும். கல்யாண முருங்கை இலையை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். 4 கல்யாண முருங்கை இலைகளை துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் 10 மிளகு தட்டி போடவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.

வடிக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி அளவுக்கு குடித்துவர  தேவையற்ற கொழுப்பு கரைந்து வெளியேறும். அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடல் எடை குறையும். கல்யாண முருங்கை செடியில் முள் இருக்கும். பூவசரம் இலையை போன்று காணப்படும். சிவந்த பூக்களை பெற்றிருக்கும். இது அழகுக்காக வளர்க்கப்படும் மரம். இதன் இலைகள் உணவாக பயன்படுகிறது.

மூட்டுவலியை குணப்படுத்தும். உஷ்ணமான தன்மை உடையதால் சளியை போக்கும்.இதை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கும் உணவு தயாரிக்கலாம். உளுந்தம் பருப்பை வறுத்து ஏலக்காய் சேர்த்து பொடி செய்து, இதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். முந்திரி, பிஸ்தா, பாதம் ஆகியவற்றை பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதிலிருந்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இவைகளை தண்ணீர் விட்டு நன்றாக கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது நீர்விட்டு நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் நெய் சேர்க்கவும். ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் கலவையை இதனுடன் சேர்க்கவும். நன்றாக வெந்தவுடன் காய்ச்சிய பால் ஊற்றவும். காலை உணவு சாப்பிடபின் இதில் ஒரு டம்ளர் குடித்துவர எடை கூடும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிட்டு வர உடல் எடை கூடும்.

Source :Dinakaran

No comments:

Post a Comment