Friday, June 24, 2016

நபார்டு வங்கி பொதுமேலாளர் தகவல் : ஆளில்லா விமானம் மூலம் பயிர் சேதம் கணக்கிடப்படும்

புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின்படி, பயிர் சேதத்தின் அளவு குறித்து செயற்கைக்கோள், ஆளில்லா விமானம் மூலம் கணக்கிடப்படும் என நபார்டு வங்கி பொதுமேலாளர் தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் (கேவிகே) சார்பில் மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில், நபார்டு வங்கி பொதுமேலாளர் பங்காருகிரி பேசியதாவது:விவசாயிகளுக்கான மத்திய அரசின் புதிய பயிர் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஜூனில் காரீப் பருவம் முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 17 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 19.44 கோடி ஹெக்டேர் சாகுபடி பரப்பில் 50 சதவீதம் பலன் பெறும். 

மத்திய, மாநில அரசுகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளன.  பயிர் இழப்பு ஏற்பட்டால் விவசாயிகள் பெறக்கூடிய இழப்பீட்டுக்கு உச்ச வரம்பு கிடையாது. பயிர் சேதத்தின் அளவையும் தீவிரத்தையும் மதிப்பிட செயற்கைக்கோள், ஆளில்லா சிறுவிமானங்கள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். விவசாயிகள் தங்களின் செல்போனிலும் பயிர் சேதங்களை படம் எடுத்து அனுப்பலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment