Tuesday, July 12, 2016

பெரம்பலூரில் பாலிஹவுஸ் அமைத்து செவ்வந்திப்பூ சாகுபடி 2 விவசாயிகள் அசத்தல்

பெரம்பலூரில் 2 விவசாயிகள் பாலி ஹவுஸ் அமைத்து செவ்வந்திப்பூ சாகுபடி செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் மானாவாரிப் பயிர்களைச் சாகுபடி செய்கிற பூமியாகும். கிணற்றுப் பாசனத்தையே பெரிதும்நம்பியுள்ள இப்பகுதியில் மக்காச்சோளம், பருத்தி, சின்னவெங்காயம் மட்டுமே பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. இதனைத் தாண்டி தோட்டக்கலைப் பயிர்களான தக்காளி, பூக்கள், காய்கறி சாகுபடியென்பது, குறிப்பிட்ட சில ஊர்களில் குறு விவசாயிகள் மட்டுமே ெசய்கின்றனர்.

இதற்கிடையே அனுக்கூர், குரும்பலூரை சேர்ந்த விவசாயிகள் இருவர் தோட்டக்கலைத்துறை உதவியுடன், நவீனத் தொழில்நுட் பத்தைப் பயன்படுத்தி காய்கறி, பூக்கள் சாகுபடியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். இதில்ம குரும்பலூரைச் சேர்ந்த பாலுசாமி மகனான குமார் என்பவர் தன துவயலில் செவ்வந்திப்பூ சாகுபடியை நவீன தொழில்நுட்ப உதவியுடன் செய்து அசத்தி வருகிறார்.

6ம்வகுப்பு மட்டுமே படித்துள்ள குமார், தனதுஅப்பா செய்துவந்த விவசாயத் தொழிலைத்தான் தொடர்ந்து வருகிறார். இருந்தும் பழைய முறைகளை கைவிட்டு நவீன தொழில்நுட்பத்தைக் கையாண்டு வருகிறார். இதற்காக கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு நேரில்சென்று முன்னோடி விவசாயிகளின் சாகுபடி தொழில் நுட்பங்களை, நுணுக்கங்களை பார்த்து உள்வாங்கியுள்ளார். பிறகு தனக்கிருக்கும் வயல்பரப்பில் பாலித்தீன்ஷீட்டால் அமைக்கப்படும் பிரமாண்ட பாலிஹவுஸ் அமைத்து செவ்வந்திப்பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக குமாருக்கு பெரம்பலூர் தோட்டக்கலைத்துறையினர் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2015- 2016 திட்டத்தின்கீழ் ரூ19.21லட்சத்தில் பாலிஹவுஸ் அமைக்க, ரூ 8.90லட்சம் மானியமாக வழங்கப்படுமென தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய 50 சதவீத மானியம் கிடைப்பதால் நம்பிக்கையுடன் தனது 2ஆயிரம் சதுரமீட்டர் வயல்பரப்பில், பாலிஹவுஸ்அமைத்து, அதனுள் செவ்வந்திப்பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். களைகளின்றி அடர்ந்துவளர்வதே இதன்சிறப்பாகும். வயல்பரப்பா இல்லை நவீன தொழிற்சாலையா என அதிசயிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்டிற்குள், சொட்டுநீர்ப் பாசன வசதி, பாகர் எனப் படும் நீரால் குளிராக்கும் குளிர்சாதனவசதியை அமைத்துள்ளார். 

இதனால் மூடப்பட்ட பந்தலுக்குள் சாரல்மழை தூவிக்கொண்டிருக்கும். அதேபோல் தேவையான அளவுக்கு சூரியவெப்பம், தேவையானஅளவுக்கு காற்றோட்டம், தேவையான அளவுக்கு நீரோட் டம் என்றத் தத்துவத்தில் பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் அனுக்கூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற இளம் விவசாயியும், குரும்பலூர் குமாரும் மட்டுமே இந்த நவீன தொழில்நுட்பத்தை பெரம்ப லூர் மாவட்டத்தில் துணிச்சலாக புகுத்தி சாகுபடியில் இறங்கியுள்ளனர். 3ஆண்டு பயிரான செவ்வந்திப்பூக்கள் 90-100நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். தற்போது 80 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் 10நாட்களில் செவ்வந்திப் பூக்கள் அறு வடை செய்யப்பட உள்ளது. 

இதுகுறித்து குமார் கூறும்போது, இங்கு அறுவடைசெய்யப்படும் பூக்கள் திருச்சி, ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு சென்று விற்கப்படவுள்ளது. முதலாமாண்டு முடிந்தவுடன் பூக்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 50 செண்டில் கிழக்குமேற்காக 56மீட்டர், தெற்குவடக் காக 36மீட்டர் எனமொத்தம் 2016மீட்டர் பரப்பளவில் செவ்வந்திப்பூ சாகுபடி செய்து வருகிறேன். பாலிஹவுஸ் 5 வருடங்களுக்கு தாங்குமென்பதால் இதே தொழில்நுட்பத் தைக் கையாளவுள்ளேன். இதனால் பூச்சித்தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது என்றார்.

தேவை அதிகரிப்பு

நவீன தொழில்நுட்பத்தின்கீழ் உழுவதற்கு, பயிர்நடுவதற்கு டிராக்டரும், அறுவடைக்கு கதிரடிக்கும் இயந்திரமும் வந்துவிட்டது. இருந்தும் களையெடுத்தல், பூச்சித் தாக்குதல், தண்ணீர்சிக்கனம் போன்றப் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் பல நூறு விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதற்கு பாலிஹவுஸ் மிகுந்த பயனளிக்கும் என்பதால் மாவட்டஅளவில் இந்தத் தொழில்நுட்பத்திற்கு விரைவில் தேவைகள் அதி கரிக்கும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

Source : Dinakaran

No comments:

Post a Comment