Wednesday, July 13, 2016

தொழுநோய் போக்கும் அழிஞ்சில்

2

இன்னவினை இன்னதலத் தின்னபொழுத இன்னபடி
இன்னதனால் எய்தும் எனவறிந்தே அன்னவினை
அன்ன தலத் தன்னபொழுதன்னபடி அன்னதானற்
பின்னமறக் கூட்டும் பிரான்


சித்த மருத்துவ முறைகளை பல்வேறு வழிகளில் பல மருத்துவ முறைகளில் பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகிறது. ஆனால் மூலிகை என அழைக்கப்படும் நமது நாட்டு தாவரங்களை அவர்கள் எத்தனை அறிவியல் பெயர் வைத்து குறிப்பிட்டாலும், அந்த மூலிகையின் பெயர்கள் தமிழில் அமைந்து நமது மருத்துவத்தின் பெருமையை உலகில் பறைசாற்றுகின்றன.

அந்த வகையில் அழிஞ்சில் முள்ளுள்ள நீண்ட இலைகளுடன் அமைந்த மரமாகும். காடுகள் புதர்கள் மலைக்காடுகளில் தானே வளரும். இதன் பூக்கள் சிவப்பு, கறுப்பு, வெள்ளை நிற பூக்களில் அமைந்திருக்கும். இதை கொண்டே கறுப்பு, சிவப்பு, அழிஞ்சில் என அழைக்கப்படுகிறது. இதுவே பெரும்பாலும் மருத்துவத்திற்கும். பயன்படுகிறது. இது வாதகோபம், கபதோடம், சீழ்வடியும், பெருநோய் முதலியவற்றை நீக்கும். பித்தத்தை அதிகரிக்கும் உண்டு.

அளவறிந்து பயன்படுத்தவேண்டும். அழிஞ்சி வேர்ப்பட்டை பொடியில் கசப்பும் குமட்டலும் காரமும் உண்டு. ரத்த அதிகாரம், கிருமிரோகம், குட்டம், விரணம், தோல் ரோசம், விடாச்சுரம், வயிற்று உப்பிசம், விஷக்கடி, முதலியவை நீங்கும். அங்கோலம் என அழைக்கப்படும் அழிஞ்சில் தைலத்திற்கு தொழுநோய் போக்கும் உயர் சிறப்பு வாய்ந்தது. அழிஞ்சி இலையை மைய அரைத்து 1கிராம் அளவில் காலை மாலை சாப்பிட்டு வர கபநோய்கள் அனைத்தும் தீரும்.

தீராத தோல் நோய் உள்ளவர்கள் அழிஞ்சில் தைலத்தை மேலுக்கு தடவி ஒரிரு துளிகள் உள்ளுக்கு சாப்பிட தீராத தோல் நோய்கள் தீரும். வேர்ப்பட்டையை 130கிராம் எடுத்து குடிநீராக்கி அதில் நெய் சிறிதளவு சேர்த்து 25மிலி வீதம் மூன்று வேளை குடிக்க, நாள்பட்ட கானா கடி, பாம்புகடி, நாய்கடி, எலிக்கடி, முதலியவற்றால் ஏற்பட்ட நஞ்சின் வீரியம் குறைந்து நஞ்சாலுண்டான தாபிதம் நீங்கும். மேலும் பெருங்குடலிற்றங்கிய பூச்சிகளும் தானாக கழிவுடன் வெளியேறும்.

இப்பட்டையை மெல்லியதாக பொடித்து மேகப்புண், சீழ்வடிகின்ற பெருநோய் புண்கள், சொறி சிரங்கு, மீது தூவிவர குணமாகும். கீழ் வாதத்தால் மூட்டுகளில் கடும் வலியுள்ளவர்கள் அந்த இடத்தில் தைலத்தை தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி நீங்கும். அழிஞ்சல் வேர்ப்பட்டைத் தூள், அதே அளவு மிளகுத்தூள் எடுத்து காய கல்ப முறையில் சாப்பிட்டுவர, வாத பித்த கப குற்றங்களால் ஏற்பட்ட அனைத்து நேய்களும் நீங்கும்.

அழிஞ்சில் வேர்ப்பட்டை தூள் 100கிராம், கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்ரி, உள்ளிட்ட கடை சரக்குகளை சமஅளவு எடுத்து சூரணம் செய்து தேனில் குழைத்து சாப்பிட்டுவர தொடக்க நிலையில் உள்ள தொழுநோய் முற்றிலும் குணமாகும். புளி, காரம், புகையிலை, கருவாடு நீக்கி கடும் பத்தியம் இருக்கவேண்டும். அழிஞ்சில் வேர்ப்பட்டையை வெள்ளாட்டு நீரில் ஊறவைத்து உலர்த்தி சூரணம் செய்து கொள்ளவேண்டும். பூரான் கடித்தவர்களுக்கு 1கிராம் அளவில் உள்ளுக்கு கொடுத்து வெந்நீர் குடித்தால் பூரான் நஞ்சு நீங்கும்.

தொடர்ந்து ரத்த வாந்தி எடுப்பவர்களுக்கு விதையின் பருப்பில் கால்பங்கு எடுத்து அதனுடன் 2கிராம்  பசும்பால் விட்டு அரைத்து 200 கிராம் பசும்பாலில் கலந்து சீனி கலந்து குடிக்க கொடுத்தால் உடனடி குணம் ஏற்படும். அழிஞ்சில்வேர், விழுதிவேர் சமஎடை எடுத்து துண்டாக்கி ஒரு வாரம் நிழலில் காயவைத்து பெரிய மட்பாண்டத்தில் போட்டு வாய்மூடி, ஏழு சீலைமண் செய்து முறைப்படி குழித்தைலம் இறக்கி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதை புரையோடிய புண்களில் தடவிவர புண் விரைவில் ஆறும்.

இதை தொடர்ந்து நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடாது. தேவைப்பட்டால் ஒருவாரம் பத்தியம் இருந்து பயன்படுத்த வேண்டும். நோய்களில் மிகவும் அருவறுக்கதக்கதாய் கருதப்படும் தொழுசூநோய்க்கு அழிஞ்சல் தைலத்தில் மூன்று முதல் ஐந்து துளிகள் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் நாள்பட்ட தொழுநோய் முழுமையாக கட்டுப்படும். அழுகிய நிலையில் உள்ள புண்கள் கூடஆறும். தொடர்ந்து முறைப்படி எடுக்க முழுமையாக தொழுநோய் குணமாகும். கடும் பத்தியம் இருக்கவேண்டும்.

தொழுஞ்சகமோ கக்கரப்பிற் சொல்அஞ் சனமாம்
அழிஞ்சல் விதையென் றறி
அழிஞ்சினது மாருதத்தை யையத்தைத் தாழ்த்தும்
ஒழிஞ்சபித் தத்தை யுயர்த்தும் விழுஞ்சீழாங்
கட்டமெனு நோயகற்றுங் வறுமருந் தெய்திடல்
திட்ட மெனவறிந்து தேர்.


என்கிறார் அகத்தியர். இயற்கையில் விளைந்து கிடக்கும் தாவரங்களில் ஒன்றான அழிஞ்சலின் மருத்துவ தன்மையை அறிந்து நமக்கு அளித்த முன்னோர்களின் வழியில் தேவை அறிந்து பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.  

Source : Dinakaran

No comments:

Post a Comment