Tuesday, July 19, 2016

மழைக்கால பாட்டி வைத்தியம்



தும்பைப் பூ

தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவை பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும். தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.

அத்திக்காய் 


அத்திக்காய், இதனையிடித்து விதையை மட்டும் போக்கி, நன்றாக அலம்பி என்றால் சத்து போகின்ற வரை அலம்புவது அல்ல, ஒரே தடவை அலம்பி, துவரை அல்லது பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட வேண்டும். இது வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. கஷ்டமான மலச்சிக்கலை போக்குகிறது. பற்களுக்குப் பலம் உண்டாக்குகிறது. இதில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது.

மிளகு 

மிளகை பெரும்பாலும் சமையலில் சேர்க்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்த மிளகை இடித்துத் துணியினால் சலித்து, நாள் தோறும் மூன்று சிட்டிகை வீதம், வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இளநரை வராமல் தடுக்கும். வாரத்திற்கு ஒரு முறை மிளகுக் குழம்பு வைத்துச் சாப்பிட்டு வந்தால் கீல் வாயு நோய் குணமாகும்.

Source : Dinakaran

No comments:

Post a Comment