Thursday, July 28, 2016

நரம்புகளை பலப்படுத்தும் பிரண்டை



முதுமை காரணமாக எலும்பு தேய்மானம், நரம்புகள் பலவீனம், ரத்த ஓட்டத்தில் கோளாறு, நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். வெற்றிலையை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் வேற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை என ஒரு வாரம் குடித்து வந்தால் நரம்புகள் பலப்படும். சர்க்கரை நோயாளிகள் தேனுக்கு பதில் மிளகு சேர்க்கவும்.

நரம்பு பலவீனத்துக்கு வெற்றிலை மருந்தாகிறது. வெற்றிலை காரம், மணத்தை உடையது. செரிமான கோளாறை போக்கும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை  சரிசெய்யும். வயதானவர்களுக்கு நல்ல பலத்தை தரக்கூடியதாகிறது. பிரண்டையை பயன்படுத்தி வயதானவர்களுக்கு நரம்பு, தசையை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

பிரண்டை கொடியை எரித்து சாம்பலாக்கி கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சாதிக்காய் பொடி சேர்க்கவும். அரை ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கி இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டுவர நரம்பு, தசை பலப்படும். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் தினமும் இதை எடுத்துக்கொள்ளலாம். பிரண்டை எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. வயதானவர்களுக்கு ஏற்படும் கை, கால் குடைச்சல், எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

கால் ஸ்பூன் வசம்பு பொடி எடுக்கவும். இதில், 2 ஏலக்காய் தட்டி போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர கை, கால் குடைச்சல், எரிச்சல் குணமாகும். வசம்பு நரம்புகளுக்கு பலம் தரக்கூடியது. அரை ஸ்பூன் பூனைகாலி விதை பொடி, அரை ஸ்பூன் அமுக்குரா சூரணம், சிறிது பனங்கற்கண்டு, காய்ச்சிய பால் சேர்த்து கலந்து இரவு நேரத்தில் குடித்துவர நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு குறையும்.

கை, கால்களில் ஏற்படும் நடுக்கம் குறையும். பக்கவாதத்துக்கு மருந்தாக அமைகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பூனைக்காலி விதை, அமுக்குரா சூரணம் உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. வறட்டு இருமலுக்கான மருத்துவத்தை பார்க்கலாம். சுக்கு, ஏலக்காயை பொடியாக்கி கால் ஸ்பூன் எடுத்து தேனுடன் கலந்து காலை, மாலை சாப்பிட்டுவர வறட்டு இருமல் சரியாகும். 

Source : Dinakaran

No comments:

Post a Comment